Mary Slessor
John Hyde
David Brainerd
Dr.R.A.C.Paul
William Carey
கிறிஸ்துவில் அன்பானவர்களே,

பரமனின் அழைப்பை ஏற்று பாரதத்தில் பலர் மிஷனரிகளாக தங்களை அர்ப்பணித்து, இருப்பிடம் விட்டு அழைப்பிடம் சென்று கர்த்தரை அறிவித்திருக்கின்றனர். அப்படிப் புறப்பட்டுச் சென்று, வட இந்தியாவிலும் பல்வேறு இடங்களிலும் ஆத்துமாக்களை பாடுகளின் மத்தியிலும் கர்த்தருக்காக ஆதாயம் செய்த பலருடைய பெயர்கள் இந்நாள் தலைமுறையினருக்கு தெரியாதிருக்கின்றது. ஸ்தாபனங்களின் தலைவர்கள் நினைவில் நிற்பதுண்டு, ஆனால் கர்த்தருக்காக அந்த ஸ்தாபனத்தில் உயிரை ஈந்து பல்வேறு சபைகளை ஸ்தாபித்தவர்கள் பெயர் நிலைவலைகளில் மிதப்பதில்லை. எனவே, அப்படிப்பட்ட மிஷனரிகளின் வாழ்க்கைச் சரிதையினை சுருக்கமாக, உலகம் அறிந்துகொள்ளும் வண்ணம் பிரசுரிக்க ஆயத்தப்படுத்தப்பட்டதே இந்த இணையதளத்தின் 'மிஷனரிகளின் வாழ்க்கை வரலாறுகள்' என்ற இப்பக்கம். 

பல்வேறு மிஷனரி ஸ்தாபனங்களில் பணியாற்றி, இறைவனடி சேர்ந்த மிஷனரிகளின் வாழ்க்கையைப் பற்றிய குறிப்புகள் தங்களிடம் இருப்பின், அதனை அந்த மிஷனரியின் குடும்பத்தினர் அல்லது உறவினரிடம் காண்பித்து, தக்க அனுமதி பெற்று, மிஷனரியினைப் பற்றிய புகைப்படங்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு தபாலிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பித் தந்தால் இணையதளத்தின் இப்பக்கத்தில் இந்திய மிஷனரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு உடனே பிரசுரிக்கப்படும். 

நீங்கள் அறிந்த மிஷனரியைப் பற்றி எழுதவேண்டிய விதம்:

சொந்த ஊர் மற்றும் பிறப்பு, தொடக்க கால கல்வி, உயர்நிலைக் கல்வி, கல்லூரிப் படிப்பு, வாலிபத்தின் வாழ்க்கை, குடும்பத்தின் பின்னணி, உடன் பிறந்தவர்கள், மிஷனரியாகச் செல்வதற்கு முன் பணியாற்றிய தகவல், மிஷனரியாக தன்னை ஒப்புக்கொடுத்ததற்கான காரணம், அதனை ஏற்றுக்கொண்ட குடும்பத்தினரைப் பற்றிய தகவல், மிஷனரியாகப் பணியாற்றிய ஸ்தாபனங்கள், பணித்தளங்கள், ஆதிவாசி மக்கள் பற்றிய தகவல்கள் இருப்பின் அதுவும், மிஷனரியாகப் பணியாற்றியபோது அவருக்கு ஏற்பட்ட நிகழ்வுகள், உடல்நிலை பாதிப்புகள், மிஷனரியாக இருந்தபோது அவரது குடும்பத்தின் நிலை. 

பணித்தளங்களில் ஏற்பட்ட ஆபத்துக்கள், விபத்துக்கள், சமூக விரோதிகளால் எதிர்க்கப்பட்ட காலங்கள். அவர் மூலமாக சந்திக்கப்பட்ட ஆத்துமாக்கள், நிறுவப்பட்ட சபைகள், அல்லது சந்திக்கப்பட்ட மக்கள் கூட்டங்கள். அவர் கடைசியாக பணியாற்றிய பணித்தளத்தின் பெயர். திருமண வாழ்க்கை, மனைவியைப் பற்றிய தகவல்கள், மனைவியின் ஊழியத்தினைப் பற்றிய செய்திகள். பிள்ளைகள், பிள்ளைகளின் தற்போதைய நிலைகள். இவ்வுலகத்தை விட்டுக் கடந்து இறைவனடி சேர்ந்த நாள் மற்றும் இடம்.   

இது ஒரு உதவிக் குறிப்பே, நீங்கள் அறிந்த அனைத்தையும் உதிர்த்துத்தாருங்கள். 
விதை வரலாறு ஆகட்டும். 

இணைய தளத்தில் பிரசுரிக்கப்படுவதற்கு முன் அதன் இறுதி வடிவம் தங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பித்தரப்படும். 

youthlineministries@gmail.com
 
Connecting the souls
SocialTwist Tell-a-Friend
visited
Youthline Radio

Heart to Hearts
world map hits counter
map counter
Youthline
HOME             HISTORY          BIOGRAPHY       MESSAGES       ARTICLES        JOIN WITH US              NEWS                  PUBLICATIONS          Contact Us 
SMITH