'A+j;iyd;
Bro.Bright Kennedy
Managing Trustee
Bro.Jacob Rajan
President
Bro.Selvaraj
Treasurer

YOUTHLINE
Website Dedicated by Mr.Rajaiah
Bro.Jah Promisson
General Secretary
Bro.P.J.Kirubagaran
Bro.Gandhi
Connecting the souls
SocialTwist Tell-a-Friend
visited
Youthline Radio

Heart to Hearts
world map hits counter
map counter
சகோ.ஸ்டான்லி அவர்களுடன் ஜெபக்குழு நண்பர்கள்
Youthline
ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, 
அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை  எழும்பிச் செழிக்கும். ஏசாயா 11:1

பல மிஷனெரிகள், தேவ மனிதர்கள், இக்காலத்திலும் ராஜ்யத்தின் சுவிசேஷத்திற்காக உலகளாவிய பணியினைச் செய்துவரும் பல பிரசித்திப்பெற்ற தேவ ஊழியர்கள் பிறந்த, வளர்ந்த மற்றும் தங்களது ஊழியத்தையும், ஸ்தாபனத்தையும் தொடங்கிய பகுதியாகிய சாயர்புரமும் அதன் வட்டாரமும் நிச்சயம் வரலாற்று சிறப்பு மிக்கதே. போப் என்ற பெயரில் தான் எழுந்தருளியிருக்கும் கல்வி நிலையங்கள் எத்தனை. என்றபோதிலும் ஆத்துமாக்ளை ஆதாயப்படுத்தவே அப்பணியினை அவர்கள் அன்று தொடங்கினர் என்பதை நாம் நினைக்கும்போது, அவர்களின் தியாகமும், திருப்பணியும் மற்றும் ஆத்தும ஆதாய நோக்கும் அவர்களோடு மாத்திரமல்ல நமக்கும் அவர்களது பயணத்தைத் தொடரும் உரிமையும், பாரமும் உண்டு என்பதை உணர்த்துகின்றது.

கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட மூத்த வாலிபர்கள் பலரின் முழங்கால்கள் முடங்கிய பகுதியே செந்தியம்பலத்தின் தேரி. அவர்கள் தங்களைத் தாங்களே அனல் மூட்டிக்கொள்ளவும், பாரத வாலிபர்களின்மேல் கொண்ட பாரத்தினாலும் இணைந்து ஜெபித்ததின் விளைவே ஐக்கியம் முழைத்தெழும்புவதற்கான ஆரம்ப அஸ்திபாரம். 1989 ம் ஆண்டு செந்தியம்பலத்தின் வடபகுதியிலுள்ள தேரியில் கிருபையின் ஊழியங்களின் வாயிலாக வாலிபர் ஜெபக்குழு தொடங்கப்பட்டது. செந்தியம்பலத்தின் அநேக வாலிபர்களின் வாழ்க்கையை இந்த ஜெபக்குழு மாற்றியமைத்தது. கிருபையின் ஊழியங்களின் ஊழியரான சகோ.நெப்போலியன், சகோ.ஆர்தர்துரை மற்றும் சகோ.ஜெயசீலன் போன்றவர்கள் இந்த வாலிப ஜெபக்குழுவினை நடத்திவந்தனர். கிருபையின் ஊழியங்களின் நிறுவனரான சகோ.பொற்செல்வன் ஆசீர் அவர்களின் ஊக்கமும், பின்தொடர் ஊழியப்பணிகளும், அவ்வப்போது நடைபெற்ற முகாம்களும் இந்த ஜெபக்குழுவின் ஆரம்பகால ஆணிவேரை வலுப்படுத்தியது. மேலும், பல பகுதிகளில் ஜெபக்குழு வாலிபர்களை மேடை ஏறச்செய்ததும், தனது மேடையினைப் பகிர்ந்தளித்ததும் வாலிபர்ளை ஆத்தும ஆதாயகர்களாக மாற்றியது. இவர்களுக்குப் பின்னர் அந்நாட்களின் கிருபையின் ஊழியத்துடன் இணைந்து தன்னார்வமாகக் கிறிஸ்துவின் ராஜ்யப் பணியினை நிறைவேற்றிவந்த சகோ.செல்வராஜ் இந்த ஜெபக்குழுவை நடத்துபவராக அவ்வூழியத்தினால் நியமிக்கப்பட்டார். சகோதரரின் வருகை ஜெபக்குழுவிலும், ஜெபக்குழு வாலிபரின் வாழ்க்கையிலும் பெரும் மாற்றத்தை உண்டுபண்ணியது. 1991 முதல் 1996 வரை அநேக வாலிபர்கள் தனிவாழ்விலும், ஆவிக்குரிய வாழ்விலும் மற்றும் ஊழியத்தின் பாதையிலும் பெலனடைய சகோதரர் காரணமாயிருந்தார். 1996 ம் ஆண்டு சகோதரர் பணி நிமித்தமாக வேற்றிடத்திற்குச் செல்லவேண்டிய சூழ்நிலை உண்டானது; என்றபோதிலும் அந்நிலையில் ஜெபக்குழுவின் வாலிபர்கள் செய்தியளிக்கவும் மேலும் ஜெபக்குழுவினை தாங்களே நடத்திச்செல்லும் நிலைக்கும் உயர்ந்திருந்தனர். இப்பலன் செந்தியம்பலத்தின் வாலிபரிடையே பணியாற்றிய ஒவ்வொரு ஊழியர்களையும் சாரும். 1996-ம் வருடத்திற்குப் பின்னர், ஜெபக்குழுவின் 90 சதவீத வாலிபர்கள் பணியின் நிமித்தமாகவும், மேலும் 10 சதவீத வாலிபர்கள் வேற்று காரணங்களாலும் கிராமத்தினை விட்டு வெளியில் செல்லும் நிலை உருவானது. பின்னும் சில நாட்கள் சில வாலிபர்கள் தேரியில் கூடி ஜெபித்துவந்தபோதிலும், ஊழியர்களின் வருகையின்மை, போதிய ஆலோசனை அளிக்கும் திறன்பெற்றோர் இல்லாத காரணத்தினால் ஜெபக்குழுவின் தொடர்ச்சியான பயணம் தற்காலிகமாக தடைபட்டது. 

தேவ சித்தம் தடைபடுவதெப்படி? ஒரு சந்ததி வாலிபர்களை உருவாக்கிவிட்டு, மறு சந்ததி வாலிபர்களிடம் செயல்பட இயலாத நிலை உருவாகிவிட்டதே என்ற ஜெபக்குழுவில் அங்கம் வகித்த சில வாலிபர்களின் ஜெபத்தினாலும், ஏக்கத்தினாலும் முயற்சியினாலும், கூட்டு ஆலோசனையினாலும் ஜெபக்குழுவிற்கு மறுஉருவம் கொடுக்கப்பட்டது. வாலிபர்களின் ஆலோசனையின்படி ஜெபக்குழுவிற்கு 'நண்பர்கள் ஜெப ஐக்கியம்' எனப் பெயரிடப்பட்டது. பின்னர் வாலிபர் பணியும், 'இயேசுவை நோக்கி' என்ற பெயரில் இரவுக் கூட்டங்களும், வாலிப முகாம்களும் செயல்படத் தொடங்கியது.  இச்சூழலிலும், முன்னணியில் நின்ற வாலிபர்கள் கிராமத்தை விட்டுச் செல்லும் நிலை நேர்ந்ததால், மீண்டும் ஓர் தடை தற்காலிகமாக ஜெபக்குழுவின் பயணத்தில் ஏற்பட்டது; என்றபோதிலும் சிதறிச் சென்றவர்கள் தங்களது இருப்பிடங்களில், ஜெபக்குழுக்களையும், ஊழியங்களையும் செய்துகொண்டிருந்தனர். ECI, IMS, FMPB, OM, GEMS, World Vision, CSI, CMS உட்பட பல ஸ்தாபனங்களிலும் சபைகளிலும் ஜெபக்குழு வாலிபர்கள் ஊழியர்களாகவும், மிஷனெரிகளாகவும் தங்களை இணைத்துக்கொண்டு ராஜ்யப் பணியினைத் தொடர்ந்ததுடன், நிறுவனங்களில் பணிபுரிந்துகொண்டிருந்த ஜெபக்குழு நண்பர்களும் வேலையினிடையே, தேவனுக்காக ஓடவும் உழைக்கவும் மறக்கவில்லை. 

வாலிபர் ஊழியத்திற்கு வரும் தடைகள்தான் எத்தனை? என்றபோதிலும் தேவராஜ்யத்தின் பணிகளும், தேவனின் திட்டங்களும் முடங்கிப்போகவில்லை. 1998 ம் ஆண்டின் இறுதி மாதங்களில் ஜெபக்குழுவின் உறுப்பினரான சகோ. சுந்தர் கிருபாகரன் சென்னையில் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருக்கும்போது,  ஜெபக்குழுவின் பாரத்தையும் வாலிபர்களைக் குறித்ததான தரிசனத்தையும் மீண்டும் தேவன் அவரது இதயத்தில் விதைத்தார். இச்சிறு குழுவிற்கு யாரை தலைவனாக அடையாளம் காட்டிக்கொடுப்பது என்ற கேள்வியுடன் சகோதரர் ஒருநாள் படுக்கையில் படுத்திருந்தபோது, இரவு ஏறக்குறைய 10:30 மணியளவில் 'நீ எழுந்து பேருந்து நிலையத்திற்குப்போ' என்று தேவன் பேசியதை இதயத்தில் உணர்ந்த சகோதரர் தேவனது சத்தத்திற்குக் கீழப்படிந்து அங்கு சென்றபோது, பேருந்து நிலையத்தில் ஒரு போதகருடன் நின்றுகொண்டிருந்த சகோதரர் காந்தியை தேவன் அடையாளம் காட்டிக்கொடுத்தார். 

அந்நாள் முதல் செந்தியம்பலத்தின் வடபகுதியிலுள்ள தேரிப்பகுதியில் ஒவ்வொரு சனிக்கிழமையிலும் ஜெபக்குழு தொடர்ந்து நடைபெற்றுவந்தது. பரந்து விரிந்த இடம் எனினும், வெயிலுக்கும் மழைக்கும் நமது எதிர்பார்ப்பை நாம் நிறைவேற்ற இயலாமல் தவித்து வந்தோம். 2004 ம் வருடத்தில் தேவையை உணர்ந்து தேவனிடத்தில் நாம் ஜெபித்தபோது தேவன் சாயர்புரத்திலுள்ள ஓர் வாடகை வீட்டில் நமது முதல் அலுவலகத்தையும், ஜெபக்குழுவையும் தொடங்க உதவி செய்தார். வாலிப சகோதரர்கள் ஜெபக்குழுக்களுடன் தொடங்கிய ஐக்கியத்தின் தரிசனம் 2006 ம் ஆண்டு விரிவடைந்து வாலிப சகோதரிகளின் ஜெபக்குழுவினையும் உருவாக்கவேண்டும் என்ற வாஞ்சையுடன் வாலிப சகோதரிகள் ஜெபக்குழுக்களும் தொடங்கப்பட்டு நடைபெற்றுவருகின்றன. 

ஞாயிறு பள்ளிகள், சிறுவர் முகாம்கள், கிராமங்கள் தோறும் வாலிபர் குழுக்கள், வாலிபர் ஆராதனைகள், முழு இரவு ஜெபங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஜெபக்குழுக்கள், வேதாகம பயிற்சி வகுப்புகள், பத்திரிக்கை ஊழியங்கள், இணையதளம் என பல்வேறு ஊழியங்களை நண்பர்கள் ஜெப ஐக்கியம் செய்துவருகின்றது.

நம் பாரதத்தையும், பரந்து விரிந்துள்ள உலகின் மானிட சமுதாயத்தையும் சந்திக்கும் நோக்குடனும் விரிவான நோக்குடனும், தரிசனத்துடனும் தொடரும் ஐக்கியத்தின் பணி பரமனின் பார்வையில் பரிசுத்தமானதாயும், உத்தமமானதாயும், உகந்ததாயும், உண்மையுள்ளதாயும் தொடர விரும்புகின்றோம்.

1989 ம் ஆண்டு முதல் ஜெபக்குழுவில் பங்கேற்றுவரும் பல வாலிபர்கள் வெளியூர்களில் வசித்துவருகின்றனர். இவர்களை ஒருங்கிணைக்கும் வண்ணமாகவும், உலகளாவிய வாலிபர் பயன் பெறவும். youthline என்ற இணையதளம் தொடங்கப்பட்டது. பல்வேறு செய்திகளை பங்காளர்கள் உடனுக்குடன் அறியவும் மற்றும் பங்காளர்கள் ஒருவருக்கொடுவர் தங்களை அறிந்துகொள்ளவும், உலகிலுள்ள பல வாலிபர்களுக்கு பயனளிக்கவும், அவர்களை கிறிஸ்துவின் பணியில் பயன்படுத்தும் நோக்குடனும் இந்த இணையதளம் தொடங்கப்பட்டது. 

சங்கீதம் 118:23 அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது.
HOME             HISTORY          BIOGRAPHY       MESSAGES       ARTICLES        JOIN WITH US              NEWS                  PUBLICATIONS          Contact Us